Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி - வெளியுறவு துறை மந்திரி

வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி - வெளியுறவு துறை மந்திரி

By: Karunakaran Tue, 28 July 2020 10:04:03 AM

வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி - வெளியுறவு துறை மந்திரி

வங்காளதேசத்தின் ரெயில்வே கட்டமைப்புகளை வலுப்படுத்த, இந்தியா 10 அகலப்பாதை டீசல் என்ஜின்களை நேற்று அந்நாட்டுக்கு வழங்கியது. இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், டீசல் என்ஜின்களை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்கு வங்காள மாநிலம் நடியா மாவட்டம் கெடி ரெயில் நிலையத்தில் இந்த என்ஜின்களை வங்காளதேசத்திடம் நேரில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

minister of foreign affairs,bangladesh,india,diesel engines ,வெளியுறவு அமைச்சர், பங்களாதேஷ், இந்தியா, டீசல் என்ஜின்கள்

தற்போது வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி, வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இருதரப்பினரையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டு வர இது அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமன் கூறுகையில், வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இருதரப்பினரையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரவும், உறுதியான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் இது உதவும் என்று கூறினார்.

Tags :
|