Advertisement

சிங்கப்பூரின் அதிபராக தர்மன் சண்முக ரத்னம் தேர்வு

By: Nagaraj Sat, 02 Sept 2023 3:34:10 PM

சிங்கப்பூரின் அதிபராக தர்மன் சண்முக ரத்னம் தேர்வு

சிங்கப்பூர்: அதிபரான வம்சாவளி தமிழர்... சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முக ரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அங்கு நடைபெற்ற தேர்தலில் தம்முடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 70.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சண்முகரத்னம் 2001-ம் ஆண்டு சிங்கப்பூர் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

tenure,expiration,singapore,presidential election,native tamil ,பதவிக்காலம், நிறைவு, சிங்கப்பூர், அதிபர் தேர்தல், வம்சாவளி தமிழர்

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் , பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வியமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் உள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிகாலம் இந்த மாதம் 13-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

Tags :
|