Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அந்த பாடல் தல தோனிக்குதான் பொருத்தமானது; சொல்வது அனிருத்

அந்த பாடல் தல தோனிக்குதான் பொருத்தமானது; சொல்வது அனிருத்

By: Nagaraj Sat, 19 Sept 2020 3:58:05 PM

அந்த பாடல் தல தோனிக்குதான் பொருத்தமானது; சொல்வது அனிருத்

தல தோனிக்கு மரணமாஸ் பாடல் பொருத்தமானது என்று இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இன்று அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது.

13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளனர்.

maranamas,dhoni,fit,composer,anirudh ,மரணமாஸ், தோனி, பொருத்தம், இசையமைப்பாளர், அனிருத்

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துடன் இசையமைப்பாளர் அனிருத் நேர்கணலால் சில விஷயங்களை கூறினார். அதில் அனிருத்திடம் இந்த வருடம் ஐபிஎல் போட்டியை பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:

இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்துள்ளேன், மேலும் நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். மேலும் தோனியை ஒரு கேப்டனாக மற்றும் ஒரு கிரிக்கெட் வீரராக அமைதியாக இருக்கும் அவரது குணம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்திலுள்ள மரணமாஸ் பாடல் தோனிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags :
|
|