Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன நடிகர் தவசி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன நடிகர் தவசி

By: Nagaraj Mon, 16 Nov 2020 10:21:21 PM

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன நடிகர் தவசி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் நடிகர் தவசி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்து பிரபலமானவர் நடிகர் தவசி. அந்த படத்தில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போதிய பணமின்றி தவித்து வருகிறார்.

actor thavasi,cancer,vulnerability,demand,treatment ,நடிகர் தவசி, புற்றுநோய், பாதிப்பு, கோரிக்கை, சிகிச்சை

இந்நிலையில் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு தவசி மற்றும் அவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய மீசையும், தாடியுமாய் கம்பீர குரலுடன், இருந்த தவசி தற்போது, புற்றுநோய் காரணமாக மொட்டை அடித்து எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.

அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவுமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags :
|
|