Advertisement

வரும் 17-ம் தேதி திமுக முப்பெரும் விழா

By: vaithegi Sun, 03 Sept 2023 11:51:11 AM

வரும் 17-ம் தேதி திமுக முப்பெரும் விழா

சென்னை: பெரியார் பிறந்த நாள் (செப். 17), திமுகவை தோற்றுவித்த அண்ணா பிறந்த நாள் (செப்.15), திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் (செப். 17) ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து, திமுக சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்தாண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுடன் சேர்த்து திமுக முப்பெரும் விழா, வருகிற 17-ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ளது.இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோரின் பெயர்களை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது.

three grand festival,dmk ,முப்பெரும் விழா,திமுக

எனவே அதன்படி, பெரியார் விருது மயிலாடுதுறை கி.சத்தியசீலன், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரம், கலைஞர் விருது அமைச்சர் ஐ.பெரியசாமி, பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவன், பேராசிரியர் விருது பெங்களூரு ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.

மேலும் திமுக தோற்றுவிக்கப்பட்ட செப். 17-ம் தேதியை இந்த ஆண்டு பவள விழாவாகக் கொண்டாடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :