Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம்

இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம்

By: vaithegi Tue, 11 July 2023 09:55:48 AM

இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம்

இந்தியா: ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று ... இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் முறை கடந்த 2017 -ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. வரி விதிப்பு விகிதம் பலமுறை மாற்றப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு வரி விதிக்க வேண்டும், இது தேவையா என்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அந்த வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-வது கூட்டம் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் 50-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கவுன்சில் தலைவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.

gst,finance minister,delhi ,ஜிஎஸ்டி ,நிதியமைச்சர் ,டெல்லி


கட்டமைப்பு வரி விலக்கு விதிகள், ஜிஎஸ்டி படிவங்களை வழங்குவதற்கான கடைசி தேதி, வரி சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் கடைசி தேதி , இந்தியாவில் உள்ள சில மாநிலங்களுக்கான குறிப்பிட்ட சலுகைகள், ஜிஎஸ்டி நிலையான விகிதம் இந்தியா முழுவதும் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பொருந்தும் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு உண்டு. எனவே இதன் காரணமாக சிமெண்ட், ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஆன ஜிஎஸ்டி அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து இதில் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

மேலும் பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி மறு ஆய்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும், ஆன்லைன் கேமிங் மற்றும் வர்த்தகம் குறித்தும் அதற்கான வரி விதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|