Advertisement

5ஜி சேவை அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகமாகும் என தகவல்

By: vaithegi Fri, 26 Aug 2022 08:54:46 AM

5ஜி சேவை அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகமாகும்  என தகவல்

புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதையடுத்து ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. கடந்த ஜூலை 26-ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாளாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது.

இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது. ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து கொண்டு வருகிறது. இதனையடுத்து முதல் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

5g service,union telecom minister ,5ஜி சேவை ,மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி

இந்த நிலையில், 5ஜி சேவை தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது 5ஜி சேவைகளை வெளியிட மிக தீவிரம் காட்டி வருகிறோம். அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்துவோம்.

அதன்பிறகு மற்ற நகரங்களில் மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

Tags :