Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை

அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை

By: vaithegi Tue, 02 Aug 2022 07:49:39 AM

அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை

சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. ஊதிய ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்த்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

negotiations,transport corporation employees ,பேச்சுவார்த்தை ,போக்குவரத்து கழக ஊழியர்கள்

இதை அடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒருவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

இதனை தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாவிட்டால் நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியுள்ளார். ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீர்வு கண்டு வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்பதே இப்போது அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :