Advertisement

பழி வாங்கும் செயல்... குமுறும் ஆசிரியர்கள்

By: Nagaraj Tue, 07 June 2022 10:54:00 PM

பழி வாங்கும் செயல்... குமுறும் ஆசிரியர்கள்

சென்னை: புதுசு புதுசா வருதுப்பா ரூல்ஸ்... தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வட்டார வள மேற்பார்வையாளருக்கு இணையதளம் வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

teachers,crowds,revenge,stories,students ,ஆசிரியர்கள், குமுறுகின்றனர், பழி வாங்குதல், கதைகள், மாணவர்கள்

இதற்கு முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தின்போது ஆண்ட்ராய்டு போனில் கூகுள் ரீடிங் அலாங் என்ற செயலியை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு கதைகளை வாசிக்க வைக்க வேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் செயலியில் வரும் கதைகளை ஆசிரியர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை வாசிக்க வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், எங்களுக்கு விடுமுறை வழங்க கூடாது என்பதற்காக பல்வேறு பணிகளை யோசித்து செய்து கொண்டிருக்கின்றனர்.

விடைத்தாள் மதிப்பீடு, பயிற்சி போன்றவைகளுக்கு செல்லாத ஆசிரியர்களை தினமும் பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களுக்கு கதைகளை வாசிக்க வைக்க வேண்டும் என கூறுகின்றனர். இது பழிவாங்கும் நோக்கத்திற்காகவே செய்யப்படுகிறது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

Tags :
|