Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அஜர்பைஜான் அரசின் எடுத்த நடவடிக்கை... 13 ஆயிரம் மக்கள் அர்மேனிய இன மக்கள் வெளியேற்றம்

அஜர்பைஜான் அரசின் எடுத்த நடவடிக்கை... 13 ஆயிரம் மக்கள் அர்மேனிய இன மக்கள் வெளியேற்றம்

By: Nagaraj Wed, 27 Sept 2023 07:24:00 AM

அஜர்பைஜான் அரசின் எடுத்த நடவடிக்கை... 13 ஆயிரம் மக்கள் அர்மேனிய இன மக்கள் வெளியேற்றம்

அஜர்பைஜான்: வெளியேறினர்... அஜர்பைஜான் அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு அஞ்சி ஒரே நாளில் அர்மேனிய இன மக்கள் 13 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்.

அஜர்பைஜானுக்கு உட்பட்ட நகோர்னா-கராபாக் பகுதியில் அர்மேனிய இன மக்கள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர்.

அங்கு அர்ட்ஸாஹ் என்ற பெயரில் தங்களுக்கென தனி ராணுவத்துடன் கூடிய அரசை நிர்வாகித்து வந்த அர்மேனிய இன மக்கள், பல ஆண்டுகளாக தனி நாடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

departed,armenia,azerbaijan,refugees,same day ,வெளியேறினர், அர்மேனியா, அஜர்பைஜான், அகதிகள், ஒரே நாள்

இந்நிலையில், கடந்த வாரம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அஜர்பைஜான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அர்ட்ஸாஹ் ராணுவ வீரர்கள் 190 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஒரே நாளில் 13 ஆயிரத்து 500 அர்மேனிய இன மக்கள் அஜர்பைஜானிலிருந்து அண்டை நாடான அர்மேனியாவிற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

Tags :