Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நீண்டகால அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது; எப்.பி.ஐ., கிறிஸ்டோபர் தகவல்

சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நீண்டகால அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது; எப்.பி.ஐ., கிறிஸ்டோபர் தகவல்

By: Nagaraj Wed, 08 July 2020 6:23:09 PM

சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நீண்டகால அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது; எப்.பி.ஐ., கிறிஸ்டோபர் தகவல்

மிகப்பெரிய அச்சுறுத்தல்... சீனாவின் அரசாங்கத்தின் உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு “மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை” ஏற்படுத்துகின்றன என எப்.பி.ஐ. பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்துடன் பேசிய கிறிஸ்டோபர் வேரே பலதரப்பட்ட இடையூறு பிரசாரம் தொடர்பாக விவரித்தார். வெளிநாடுகளில் வசிக்கும் சீன நாட்டினரை சீனா குறிவைக்கத் தொடங்கியதாகவும், அவர்கள் திரும்பி வருவதை கட்டாயப்படுத்தியதாகவும், அமெரிக்காவின் கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் சமரசம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

christopher,china,threat,prolonged,bribery ,கிறிஸ்டோபர், சீனா, அச்சுறுத்தல், நீண்டகாலம், லஞ்சம்

தேவையான எந்த வகையிலும் உலகின் ஒரே வல்லரசாக மாற சீனா முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் கிறிஸ்டோபர் வேரே தெரிவித்துள்ளார். சீன தலையீடு, உளவு, தரவுகள் மற்றும் பண திருட்டு, சட்டவிரோத அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொலைநோக்கு பிரசாரம், லஞ்சம் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அமெரிக்க கொள்கையில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாடு முழுவதும் தற்போது நடந்து கொண்டிருக்கும் 5,000 தீவிர புலனாய்வு வழக்குகளில், கிட்டத்தட்ட அரைவாசி சீனாவுடன் தொடர்புடையவை என்றும் கிறிஸ்டோபர் வேரே சுட்டிக்காட்டினார்.

Tags :
|
|