Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடிப்படை தகவல் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது

அடிப்படை தகவல் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது

By: Nagaraj Tue, 27 Oct 2020 11:36:44 PM

அடிப்படை தகவல் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது

ஒப்பந்தம் கையெழுத்தானது... இந்தியா-அமெரிக்கா இடையே அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் அமெரிக்க செயற்கைக் கோள்களில் இருந்து துல்லியமான தரவுகளையும் நிலப்பரப்பு படங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் இருந்து குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாடுகளைக் கொண்ட முக்கியமான தகவல்களை இந்தியா அணுக முடியும்.

agreement,basic,boundary issue,information,usa ,ஒப்பந்தம், அடிப்படை, எல்லை பிரச்னை, தகவல்கள், அமெரிக்கா

இதுகுறித்து டெல்லியில் விளக்கமளித்த ராஜ்நாத்சிங் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைக் கையாளவும், கண்காணிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசுகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் அனைத்து நாடுகளுக்கும் இஸ்தராதன்மை என்பது இரு நாடுகளும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

Tags :
|