Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

By: vaithegi Mon, 25 Sept 2023 10:38:59 AM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது ...அதிமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்களின் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ம் தேதி டெல்லிக்கு சென்றார்.

இதையடுத்து அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் , முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அமித்ஷா கூறியதாக தெரிகிறது. ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

aiadmk district secretaries meeting ,அதிமுக ,மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஆனால் அதே சமயம் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிரடியாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கடந்த 22ஆம் தேதி டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே .பி. நட்டாவை சந்தித்து அண்ணாமலையின் பதவியை பறிக்க வலியுறுத்தியதாகவும், அதை அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இச்சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 3:45 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக உடனான உறவு ஆகியவை பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

Tags :