Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க துணை தூதரகத்தில் அமெரிக்க கொடி கீழே இறக்கப்பட்டது

அமெரிக்க துணை தூதரகத்தில் அமெரிக்க கொடி கீழே இறக்கப்பட்டது

By: Nagaraj Mon, 27 July 2020 4:18:52 PM

அமெரிக்க துணை தூதரகத்தில் அமெரிக்க கொடி கீழே இறக்கப்பட்டது

துணை தூதரகத்தில் இருந்த அமெரிக்க கொடி கீழறக்கப்பட்டது... சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமெரிக்கக் கொடி திங்கள்கிழமை காலை கீழிறக்கப்பட்டது.

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தடையை சீனா வெள்ளிகிழமை அறிவித்திருந்தது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாஸ்டனில் உள்ள சீன தூதரகம் மற்றும் சில சீன நிறுவனங்களை மூட சீனாவுக்கு 72 மணி நேரம் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

american flag,consulate,lowered,stir ,அமெரிக்க கொடி, துணை தூதரகம், கீழறக்கப்பட்டது, பரபரப்பு

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம், சீனா - அமெரிக்க தூதரக மாநாட்டின் விதிமுறைகளை அவமதிப்பதாக குறிப்பிட்ட சீனா தனது நாட்டின் செங்டு பகுதியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தனது ஒப்புதலை வாபஸ் பெறுவதற்கான முடிவை அறிவித்தது.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் ஜி ஜின்பிங் அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகத்திற்கான புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ததிலிருந்து அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் திங்கள்கிழமை காலை அமெரிக்க கொடி கீழிறக்கப்பட்டது. மெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

Tags :