Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணிரின் அளவு 15,961 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணிரின் அளவு 15,961 கன அடியாக குறைவு

By: vaithegi Wed, 05 Oct 2022 3:03:17 PM

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணிரின் அளவு 15,961 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,961 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118.71 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 91.42 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

மேலும் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை.

எனவே இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

mettur dam,cubic feet ,மேட்டூர் அணை,கன அடி

அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டது.

அணையில் இருந்து உபரி நீர் 2,000 கன அடி 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் மூடப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 15,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags :