Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

By: Nagaraj Mon, 14 Sept 2020 9:33:08 PM

புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

செம வைரல்... மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் வெளியிட்ட புதிய பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நுாற்றாண்டு கண்ட பாம்பன் ரயில் பாலம் பலவீனமாகி வருவதால், மத்திய அரசு ரூ.250 கோடியில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க முடிவு செய்தது. பிரதமர் மோடி பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க, 2019 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார்.

chem viral,animation,pamban bridge,technology ,செம வைரல், அனிமேஷன், பாம்பன் பாலம், டெக்னாலஜி

தற்போது கடலில் பாலத்திற்கு புதிய துாண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் பாலத்தில் ரயில் செல்வது, லிப்ட் டெக்னாலஜியில் தூக்குப் பாலம் இயங்குவது, கப்பல் சென்ற பின் மீண்டும் கீழிறக்கப்பட்டு ரயில் செல்வது ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Tags :