Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி இலையுதிர்காலத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி இலையுதிர்காலத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

By: Karunakaran Sun, 21 June 2020 2:11:06 PM

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி இலையுதிர்காலத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி, ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அங்கு 18 பேருக்கு செலுத்தப்பட்டு, அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து கமலேய் தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் இந்த சோதனையை நடத்தியுள்ளது.

russia,coronavirus,corona vaccine,autumn,kamalei national epidemiology ,ரஷியா,கொரோனா தடுப்பூசி,இலையுதிர்காலம், கமலேய் தேசிய தொற்றுநோயியல்

இதுகுறித்து மாஸ்கோவில் இந்நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறுகையில், ரஷியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி இலையுதிர்காலத்தில் அதாவது செப்டம்பர்-அக்டோபர் தொடங்கி விடலாம். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரத்த பிளாஸ்மாவை நாங்கள் சோதித்து பார்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ரஷிய மக்களிடம் கொரோனாவை தடுத்து நிறுத்தி விடலாம் என நம்பிக்கை எழுந்துள்ளது. உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புகளை இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது சர்வதேச சந்தைக்கு வரும் என உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் உள்ளனர்.

Tags :
|
|