Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Sun, 09 July 2023 1:21:27 PM

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

சென்னை: விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 12 வரை நீட்டிப்பு .. நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 13-ம் தேதி நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் பெற்ற நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கு ஜூலை 10ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

mpbs,bds course ,எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு

ஆனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 10 -ம் தேதியிலிருந்து வருகிற ஜூலை 12- ம் தேதி மாலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ கல்வி ஆராய்ச்சி துறை அறிவித்துள்ளது.

எனவே எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் thhealth.tn.gov.in, tnmedicalselection.org என்கிற இணையதள முகவரியின் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags :
|