Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 அதிகரிப்பு .

நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 அதிகரிப்பு .

By: vaithegi Tue, 07 Mar 2023 11:56:32 AM

நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 அதிகரிப்பு .

புதுடெல்லி: விண்ணப்ப கட்டணம் உயர்வு .... இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. 2023-24-ம் ஆண்டின் நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது .

இதனை அடுத்து ஆன்லைன் விண்ணப்பம் பற்றிய அறிவிப்பு (https://neet.nta.nic.in/) இணையதளத்தில் வெளியாகும். தமிழ்நாட்டில் 5,500க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் . மற்றும் பி.டி.எஸ்.இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

application fee,neet entry ,விண்ணப்ப கட்டணம், நீட் நுழைவு

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. நீட் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1600ல் இருந்து ரூ.1700 ஆக அதிகரித்துவுள்ளது.

அதேபோல், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500ல் இருந்து ரூ.1600 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.900ல் இருந்து ரூ.1000 ஆகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுவுள்ளது.

Tags :