Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

By: vaithegi Thu, 06 Apr 2023 09:43:59 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன்  நிறைவு

சென்னை: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் ( NEET) மூலம் மாணவர் சேர்க்கைநடத்தப்படுகிறது.

எனவே அதன்படி 2023-24-ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில்நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்தமார்ச் 6-ம் தேதி தொடங்கியது.

duration,neet exam ,கால அவகாசம்,நீட் தேர்வு

இதனை அடுத்து விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 6) நிறைவு பெறுகிறது. எனவே,விருப்பமுள்ளவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இது பற்றி கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதையடுத்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.

Tags :