Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றியது

நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றியது

By: Karunakaran Mon, 09 Nov 2020 12:20:15 PM

நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றியது

நாகோர்னா-காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான், ஆர்மேனியா ஆகிய இரு நாடுகள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து இரு நாடுகள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த மோதல் விவகாரத்தில் ரஷியா தலையிட்டு 2 முறை சண்டை நிறுத்தங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் இரண்டுமே தோல்வியில் முடிந்தன. பின்னர் அமெரிக்கா தலையீட்டில் உருவான 3-வது சண்டை நிறுத்தமும் தோல்வி அடைந்தது. நாகோர்னா காராபாக் பிராந்தியத்தில் இருதரப்பு ராணுவமும் தொடர்ந்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.

azerbaijani army,susha,nagorna karabakh,armenia ,அஜர்பைஜான் இராணுவம், சுஷா, நாகோர்னா கராபாக், ஆர்மீனியா

தற்போது நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் நேற்று கைப்பற்றியது. இதனை அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அனைவருக்கும் தெரிவித்தார்.

இருப்பினும் இதனை ஆர்மேனியா ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. சுஷா சூசா நகரில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக ஆர்மேனியா ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இருநாடுகள் இடையே பல நாட்களாக நீடித்து வரும் சண்டையை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

Tags :
|