Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ஆண்டும் தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பு ..வட மாநில ஆர்டர்கள் பாதிப்பு

இந்த ஆண்டும் தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பு ..வட மாநில ஆர்டர்கள் பாதிப்பு

By: vaithegi Wed, 13 Sept 2023 12:11:55 PM

இந்த ஆண்டும் தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பு ..வட மாநில ஆர்டர்கள் பாதிப்பு


டெல்லி: சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,062 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக 1,216 நிரந்தர உரிமம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. தீபாவளி சீசன் விற்பனைக்காக ஆடிப்பெருக்கன்று 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டன.

கடந்தாண்டு நாடு முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை சூடு பிடித்ததால் கடைகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளிலிருந்த 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் கடந்தாண்டு நவம்பர் மாதமே சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.

வடமாநிலப் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை மையமாக வைத்து நடைபெறும் ஆப் சீசன் உற்பத்தியும் அதிகரித்து குடோன்கள் மற்றும் கடைகளில் பட்டாசுகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டன. 30, 60, 90, 120 சாட் என வானில் மிக உயரத்தில் சென்று வெடிக்கும் பேன்சி ரகப் பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இந்த ரகப் பட்டாசுகள் வட மாநிலங்களில் அதிக அளவு விற்பனையாகவில்லை.

fireworks,delhi,northern states orders ,பட்டாசு ,டெல்லி,வட மாநில ஆர்டர்கள்

மேலும் ஆடிப்பெருக்கன்று சிறப்பு பூஜையுடன் அனைத்துப் பட்டாசு கடைகள் மற்றும் ஆலைகளில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனை முன்பதிவு தொடங்கியது. ஆனால்,எதிர்பார்த்த அளவு பட்டாசு ஆர்டர்கள் வராததால் குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் பட்டாசுகள் தேக்கம் அடைந்து உள்ளன.

இந்த நிலையில், இந்தாண்டும் தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வட மாநில ஆர்டர்கள் பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

Tags :
|