Advertisement

இன்றும் நடக்கிறது பெங்களூரு திருவிழா

By: Nagaraj Sun, 26 Mar 2023 6:27:19 PM

இன்றும் நடக்கிறது பெங்களூரு திருவிழா

பெங்களூரு: இன்றும் நடக்கிறது... பெங்களூரு கப்பன் பூங்காவில் நம்ம பெங்களூரு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

முன்னதாக, பெங்களூரு திருவிழாவை வருவாய்த்துறை அமைச்சர் அசோக் துவக்கி வைத்து பேசியதாவது: நமது பெங்களூரு திருவிழாவை தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கெம்பேகவுடாவில் பெங்களூரு உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது பெங்களூரு உலகின் தனித்துவமான நகரமாக மாறியுள்ளது. வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். அவ்வாறு வந்தவர்கள், அவர்களது ஊர்களில் உள்ள திருவிழாக்களை கொண்டாடி வருகிறார்கள்.

bangalore,ashok,festival,information,mantri, ,அசோக், தகவல், திருவிழா, பெங்களூரு, மந்திரி

ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நமது பெங்களூரு விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அப்போது மாநிலத்தில் பாஜக ஆட்சி இல்லை. தற்போது பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெங்களூரு விழாவை கொண்டாட முதல்வர் பசரவாஜ் அனுமதி அளித்துள்ளார். 2 நாட்கள் நடைபெறும் விழாவையொட்டி விதானசவுதா வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பெங்களூரு திருவிழாவில் மக்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும். இந்த பெங்களூரு விழாவை ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
|
|