Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பான மழை பொழிவு ஜூலை மாதத்திலும் இருக்கும்; வானிலை மையம் அறிவிப்பு

சிறப்பான மழை பொழிவு ஜூலை மாதத்திலும் இருக்கும்; வானிலை மையம் அறிவிப்பு

By: Nagaraj Thu, 02 July 2020 09:19:11 AM

சிறப்பான மழை பொழிவு ஜூலை மாதத்திலும் இருக்கும்; வானிலை மையம் அறிவிப்பு

ஜுலையிலும் மழைப்பொழிவு சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தென் மேற்கு பருவ மழை, ஜூன் மாதத்தில், இயல்பை விட, 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. ஜூலையிலும் மழை பொழிவு சிறப்பாக இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடப்பாண்டில், வழக்கத்தை விட முன்னதாக, தென் மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியது. கடந்த மாதத்தில், வழக்கத்தை விட, 18 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. வழக்கமாக, ஜூன் மாதத்தில், சராசரியாக, 166.9 மி.மீட்டர் மழை பெய்யும்.ஆனால், இந்த ஆண்டு, 196.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. 2008ம் ஆண்டில், ஜூன் மாதம், 202 மி.மீட்டர் மழை பெய்தது.

weather center,monsoon,farmers,rain ,வானிலை மையம், பருவமழை, விவசாயிகள், மழை

அதன்பின், இப்போது தான், ஜூன் மாதத்தில், அதிக மழை பெய்துள்ளது.கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சராசரியை விட, 33 சதவீதம் குறைவாக மழை பெய்தது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்திலேயே நல்ல மழை பெய்துள்ளது, காரீப் பருவ விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை மாதத்திலும், பருவ மழை சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில், இரண்டு புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அதன் மூலம், மழை அதிகளவில் பெய்யும். இவ்வாறு, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விவசாயப்பணிகள் நடந்து வரும் நிலையில் மழை பொழிவு நன்றாக இருந்தால் இந்தாண்டு சாகுபடி அதிகளவு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Tags :