Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போகி பண்டிகை .. சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டியது

போகி பண்டிகை .. சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டியது

By: vaithegi Sat, 14 Jan 2023 10:01:10 AM

போகி பண்டிகை    ..    சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டியது

சென்னை: காற்று மாசு உயர்வு ... தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. எனவே இதையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தாண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து யை வரவேற்று கொண்டு வருகின்றனர். எனவே அதன் ஒரு பகுதியாக சென்னை,மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி கொண்டு வருகின்றனர்.

air pollution,bogi festival ,காற்று மாசு,போகி பண்டிகை

அதைத்தொடர்ந்து போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசு உயர்ந்து உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் கற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டியது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் காலை 6 மணி நிலவரப்படி ஆலந்தூர் 155, பெருங்குடி 113, கொடுங்கையூர் 94 , மணலி 87, அரும்பாக்கம் 86, வேளச்சேரி 84, ராயபுரம் 82 என உள்ளது. பிளாஸ்டிக், டயர்களை எரிப்பதை தவிக்குமாறு மாசுக்கட்டுப்பாடி வாரிய அதிகாரிகள் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

Tags :