Advertisement

இருமொழிக் கொள்கையே தொடரும்; அமைச்சர் கடிதம்

By: Nagaraj Mon, 07 Sept 2020 5:05:52 PM

இருமொழிக் கொள்கையே தொடரும்; அமைச்சர் கடிதம்

இரு மொழிக் கொள்கையே தொடரும்... தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்.

minister,letter,protest,entrance examination,bilingual policy ,அமைச்சர், கடிதம், எதிர்ப்பு, நுழைவுத்தேர்வு, இருமொழிக் கொள்கை

புதிய கல்விக்கொள்கையில் இலக்கை 2019-20ஆம் ஆண்டே தமிழகம் எட்டிவிடும். புதிய கல்விக்கொள்கையில் உள்ள நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஏற்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கும் அமைச்சர் கடிதத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Tags :
|