Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பாஜக பொது செயலாளர் குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பாஜக பொது செயலாளர் குற்றச்சாட்டு

By: Karunakaran Sun, 30 Aug 2020 6:34:40 PM

மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பாஜக பொது செயலாளர் குற்றச்சாட்டு

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அதற்கான பணிகள் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் இன்னும் ஏழு மாதத்திற்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஏழு மாதத்திற்குள் தேர்தல் வர இருப்பதால் பாஜக, மம்தா பானர்ஜி ஆட்சி மீது குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பா.ஜனதாவின் பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா மம்தா பானர்ஜி குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

bjp general secretary,thousands factories,mamata banerjee,west bengal ,பாஜக பொதுச் செயலாளர், ஆயிரம் தொழிற்சாலைகள், மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம்

பா.ஜனதாவின் பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மம்தா பானர்ஜி ஆட்சிக்காலத்தில் சிறிய மற்றும் பெரிய என ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. முதலீட்டார்கள் சந்திப்பு, அந்த சந்திப்பிற்கு ஆன செலவுகள் என்ன?, பெற்ற முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது பீகார் மாநிலத்தில் ஆட்சி முடிவடையவுள்ளதால், அங்கு தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வழக்கு தொடரப்பட்டும், மனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நிச்சயமாக நடைபெறும் எர்னா எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Tags :