Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார்

By: vaithegi Thu, 15 Sept 2022 09:29:19 AM

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்  இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார்

சென்னை: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவியருக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

breakfast,m.k. stalin ,காலை சிற்றுண்டி, மு.க ஸ்டாலின்

இதனை அடுத்து முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய முதல் அமைச்சர், பின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிற்றுண்டி வகைகளில் ஏதாவது ஒன்றை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது இயன்ற அளவு அந்தந்த பகுதியில் விளையும் அல்லது கிடைக்கும் சிறுதானியங்களின் அடிபடையிலான சிற்றுண்டியை தயார் செய்து வழங்க வேண்டும்.

Tags :