Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலை உணவு திட்டம் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட உள்ளது

காலை உணவு திட்டம் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட உள்ளது

By: vaithegi Mon, 07 Aug 2023 3:17:40 PM

காலை உணவு திட்டம் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட உள்ளது

சென்னை: ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ விரிவாக்கம் .... தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 1978 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

primary school,breakfast scheme ,தொடக்கப் பள்ளி,காலை உணவு திட்டம்

இந்த நிலையில் வருகிற 25-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டமானது விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதையடுத்து திருக்குவளையில் இத்திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நகர்புற கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 318 அரசு பள்ளிகளில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகிறது.

Tags :