Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

By: vaithegi Fri, 13 Oct 2023 4:02:13 PM

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்


சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டு வருகிற செப். 15 -ம் தேதி முதல் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5 -ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு படிப்படியாக அணைத்து பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் உள்ளூரில் விளையும் காய்கறிகளைக் கொண்டு சத்தான காலை உணவு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

breakfast scheme,schools ,காலை உணவுத்திட்டம் ,பள்ளிகள்


இதையடுத்து இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தின் படி உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

எனவே அதன் அடிப்படையில், நிதி நிலையை பொருத்து அடுத்தடுத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.

Tags :