Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாவலர் நடத்திய கொடூரம்... சீனாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கத்திக்குத்து

பாதுகாவலர் நடத்திய கொடூரம்... சீனாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கத்திக்குத்து

By: Nagaraj Fri, 05 June 2020 12:11:34 PM

பாதுகாவலர் நடத்திய கொடூரம்... சீனாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கத்திக்குத்து

சீனாவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவிலுள்ள ஆரம்பநிலைப் பள்ளியில், 37 மாணவா்கள் 3 ஆசிரியா்கள் மீது பள்ளி பாதுகாவலா் கத்திக் குத்து தாக்குதல் நடத்தினாா். இச்சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

guardian,china,screaming,schoolgirls,teachers ,பாதுகாவலர், சீனா, கத்திக்குத்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்

குவாங்ஸி ஷுவாங் மாகாணம், வூஷூ நகரிலுள்ள பள்ளியொன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த 50 வயது லீ ஷியோமின், அங்கிருந்த மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது சரமாரியாக கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தினாா். இதில் 37 மாணவா்கள், 3 ஆசிரியா்கள் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவில் மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக, பள்ளி மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|