Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதல்வர் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

By: vaithegi Sun, 23 Apr 2023 11:06:52 AM

முதல்வர் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே மாதம் 2-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உ ள்ளது. தமிழக சட்டப்பேரவையின் 5-ம் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரையும், 2-ம் கூட்டம் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம்தேதி வரையும் நடைபெற்றது. 2023-2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதியும், வேளாண்மை நிதிநிலை அறிக்கை 21-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்படபல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் மே 2-ம் தேதி மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. பட்ஜெட் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

cabinet meeting,chairman ,அமைச்சரவை கூட்டம்,முதல்வர்

மேலும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கைநிர்ணயித்துள்ள தமிழக அரசு, சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10, 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகளைப் பெறுவதற்காக, தமிழக அமைச்சர்கள் வெளிநாடு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாடு பயணம் மற்றும் அடுத்த மாதம் முதல்வர்மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் வெளிநாடு பயணம் ஆகியவற்றுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இது தொடர்பாக வருகிற 24-ம் தேதி தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் தகவல் கூறப்படுகிறது.


Tags :