Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பசுவதை தடைச்சட்டம் குறித்து அமைச்சரவை விவாதித்து முடிவு செய்யும்

பசுவதை தடைச்சட்டம் குறித்து அமைச்சரவை விவாதித்து முடிவு செய்யும்

By: Nagaraj Tue, 06 June 2023 8:06:05 PM

பசுவதை தடைச்சட்டம் குறித்து அமைச்சரவை விவாதித்து முடிவு செய்யும்

கர்நாடகா: அமைச்சரவை விவாதிக்கும்... பசுவதை தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கர்நாடக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு ஆட்சேபம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த சட்டம் குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

முந்தைய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள பசுவதை தடைச் சட்டம் தெளிவாக இல்லை. எனவே தற்போதுள்ள காங்கிரஸ் அரசு அது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பசுவதை தடை சட்டம் குறித்து எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. அமைச்சரவையில் விவாதித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றார்.

cow slaughter,prohibition act,bjp,review,chief minister,cabinet ,பசுவதை, தடை சட்டம், பாஜகவினர், மறுபரிசீலனை, முதல்வர், அமைச்சரவை

முன்னதாக கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.வெங்கடேஷ், “எருமை மாடுகளை வதைக்கும்போது பசுமாடுகளை ஏன் வதைக்க்க்கூடாது என்று கேட்டிருந்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து.

முந்தைய பா.ஜ.க. அரசு பசுவதை தடை சட்டத்தை கொண்டுவந்தது. அதில் எருமைகளை வதை செய்வதற்கு (கொல்வதற்கு) அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் பசுவதை கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது குறித்து விவாதித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

வயதான பசுமாடுகளை வைத்து பராமரிப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளன. எனவே வயதான பசுக்களை கொல்வதன் மூலம் பிரச்னையை சமாளிக்க முடியும் என்று அமைச்சர் வெங்கடேஷ் கூறியிருந்தார். பசுவதை தடை சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அமைச்சரின் கருத்துக்கு பலத்த ஆட்சேபங்கள் எழுந்தன. இதை முன்வைத்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாகவும் பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|