Advertisement

இன்று மாலையுடன் நிறைவடைந்தது ஈரோட்டில் பிரச்சாரம்

By: Nagaraj Sat, 25 Feb 2023 10:47:09 PM

இன்று மாலையுடன் நிறைவடைந்தது ஈரோட்டில் பிரச்சாரம்

ஈரோடு: இன்று மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரித்தனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

by-election,campaign,erode, ,இடைத்தேர்தல், ஈரோடு, பிரச்சாரம்

அதிமுக வேட்பாளராக, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ச.ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|