Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்ப் பாணியிலேயே அவரின் தோல்வியை சுதந்திர தேவி சிலை கூறும் கேலிச்சித்திரம்

டிரம்ப் பாணியிலேயே அவரின் தோல்வியை சுதந்திர தேவி சிலை கூறும் கேலிச்சித்திரம்

By: Karunakaran Mon, 09 Nov 2020 12:40:50 PM

டிரம்ப் பாணியிலேயே அவரின் தோல்வியை சுதந்திர தேவி சிலை கூறும் கேலிச்சித்திரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட்டார். இந்த தேர்தலின் முடிவில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்ததாக டுவிட்டரில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் டிரம்பை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை டிரம்பிடம் அவரது பாணியிலேயே அவரின் தோல்வியை கூறும் வகையிலான கேலிச்சித்திரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

caricature,statue of liberty,defeat,trump style ,கேலிச்சித்திரம், லிபர்ட்டி சிலை, தோல்வி, டிரம்ப் பாணி

அதாவது டிரம்பை நோக்கி சுதந்திர தேவி ‘யூ ஆர் பயர்டு’ என கூறுவதாக அந்த கேலிச்சித்திரம் வரையப் பட்டுள்ளது. டிரம்பின் தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தன்னுடன் ஒத்துப்போகாத ஏராளமான அதிகாரிகளின் பதவியை பறித்துள்ளார். அப்போதெல்லாம் அவர்களின் பெயர்களுடன் ‘யூ ஆர் பயர்டு’ என டிரம்ப் குறிப்பிடுவது வழக்கம்.

அதே பாணியில் டிரம்பின் பதவி பறிக்கப்பட்டதாக சுதந்திரதேவி கூறும் வகையில் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் ஜோ பைடன் அதிபர் பதவியில் பொறுப்பேற்கவுள்ளார்.

Tags :
|