Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ,பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு .. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ,பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு .. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Wed, 22 Mar 2023 10:45:23 AM

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ,பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு  .. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை:அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை .... கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. ஆனால் அதேநேரம் பொதுக்குழுவில் உள்ள தீர்மானங்களுக்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர முடியும் எனவும் கூறியிருந்தது.

எனவே இதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஏப்ரல் 11-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதனை அடுத்து இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அதற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தின் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார்.

general secretary,aiadmk ,பொதுச் செயலாளர்,அதிமுக

அப்போது 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 11-ம் தேதி தீர்மானத்தை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்தலை அறிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், வழக்குகளுக்காக காத்திருக்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும் வழக்கை ஏப்ரல் 11-ம் தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே விசாரிக்கலாம் எனவும், எனவே அதன்படி இன்று விசாரிக்க உள்ளதாகவும், நாளை மறுநாள் தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி குமரேஷ்பாபு அறிவித்தார். அதுவரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதித்த நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்று அனுமதி அளித்தார். எனவே அதன்படி ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்குகளும் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.


Tags :