Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் கொலையை நியாயப்படுத்தி பேசிய உருது கவிஞர் மீது வழக்குப்பதிவு

பிரான்ஸ் கொலையை நியாயப்படுத்தி பேசிய உருது கவிஞர் மீது வழக்குப்பதிவு

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:04:27 AM

பிரான்ஸ் கொலையை நியாயப்படுத்தி பேசிய உருது கவிஞர் மீது வழக்குப்பதிவு

பிரான்சில் ஆசிரியர் கொலையை நியாயப்படுத்தி பேசிய கவிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகமது நபியின் கேலிச்சித்திர விவகாரத்தில் தலை துண்டித்து கொல்லப்பட்ட ஆசிரியரின் படுகொலையை நியாயப்படுத்தி பேசிய கவிஞர் முனாவர் ராணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பேட்டி, கருத்து சுதந்திரம் குறித்து நடத்திய பாடத்தின்போது முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காட்டி பாடம் நடத்தி இருக்கிறார். முன்னதாக, தான் இப்படி ஒரு படத்தை காட்டப்போகிறேன். இதனால் இஸ்லாமிய மாணவர்கள் கோபத்திற்கு உள்ளாக நேரலாம்.

lucknow,urdu poet,france,teacher murder,investigation ,லக்னோ, உருது கவிஞர், பிரான்ஸ், ஆசிரியர் கொலை, விசாரணை

ஆகவே அவர்கள் வெளியேறிவிடுவது நல்லது என்று சொல்லிவிட்டுத்தான் அந்த படத்தை காட்டி இருக்கிறார். அவர் வகுப்பில் எப்படி இப்படி ஒரு சர்ச்சை படத்தை காட்டலாம் என்று பெரும் சர்ச்சை நிலையில், அவரின் தலையை துண்டித்து கொலை அதை வீடியோவாக வெளியிட்டு, பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.

ஆசிரியரின் படுகொலையால் பிரான்ஸ் மக்கள் கொதித்தெழுந்தனர். பல்வேறு கண்டனத்திற்கும் ஆளாகியது இந்த செயல். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில், நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் குறித்து பிரான்சில் நடந்த கொலையை ஆதரித்ததோடு அல்லாமல், யாராக இருந்தாலும் என்னுடைய தந்தையையோ, தாயையோ மோசமாக கார்ட்டூன் வரைந்தால் அவரை கொன்றுவிடுவேன். நானே அவரை கொன்றிருப்பேன்'' என்று உருது கவிஞர் முனாவர் ராணா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இதையடுத்து, லக்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் ராணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|