Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு... ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு... ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

By: Nagaraj Mon, 24 Apr 2023 7:22:45 PM

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு... ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை: வரும் ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைப்பு... அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச் செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு 3 ஆவது நாளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

membership addition,deletion,affect,ops,request ,உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், ஆகியவை, பாதிப்பு, ஓபிஎஸ், கோரிக்கை

மேலும், மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தபின் எடுக்கப்படும் அதிமுகவின் அனைத்து முடிவுகளும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கில் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

Tags :
|
|