Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐகோர்ட்டில் இன்று முதல் வழக்குகள் நேரடி விசாரணை; வக்கீல்களுக்கு கருப்பு நிற ஆடை அணிய விலக்கு

ஐகோர்ட்டில் இன்று முதல் வழக்குகள் நேரடி விசாரணை; வக்கீல்களுக்கு கருப்பு நிற ஆடை அணிய விலக்கு

By: Monisha Mon, 07 Sept 2020 10:20:57 AM

ஐகோர்ட்டில் இன்று முதல் வழக்குகள் நேரடி விசாரணை; வக்கீல்களுக்கு கருப்பு நிற ஆடை அணிய விலக்கு

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட ஊரடங்கினால், சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட நீதிமன்றங்கள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. பின்னர் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் சில மாவட்ட நீதிமன்றங்கள் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின்னர் சென்னை ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் இன்று முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளது. அதாவது, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஆர்.சுப்பையா தலைமையிலான அமர்வு, மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு என்று 3 அமர்வுகள் காலையில் வழக்குகளை நேரடியாக விசாரிக்கும். பிற்பகலில் மீதமுள்ள வழக்குகளை காணொலி மூலம் விசாரிக்க உள்ளன.

chennai high court,inquiry,advocate,judges,case ,சென்னை ஐகோர்ட்,விசாரணை,வக்கீல்,நீதிபதிகள்,வழக்கு

அதேபோல, மூத்த நீதிபதி வினித் கோத்தாரி, நீதிபதிகள் கிருபாகரன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் காலையில் கணொலி மூலமாகவும், பிற்பகலில் நேரடியாகவும் வழக்குகளை விசாரிக்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னை ஐகோர்ட்டுக்குள் வரும் வக்கீல்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை ஐகோர்ட்டு நிர்வாகக்குழு விதித்துள்ளது.

ஐகோர்ட்டுக்குள் வரும் வக்கீல்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். நுழைவு வாயிலில் கைகளை கழுவி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பின்னர் உள்ளே வர வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் ஐகோர்ட்டுக்குள் வரக்கூடாது. தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று உத்தரவாத கடிதம் அளிக்க வேண்டும்.

chennai high court,inquiry,advocate,judges,case ,சென்னை ஐகோர்ட்,விசாரணை,வக்கீல்,நீதிபதிகள்,வழக்கு

ஐகோர்ட்டு முதல் தளத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் வக்கீல்கள் அமர்ந்திருக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு எடுக்கும்போது தான் அந்தந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட வக்கீல் மட்டும் கோர்ட்டு அறைக்குள் செல்ல வேண்டும். வழக்கு தொடர்புடைய வக்கீல் மற்றும் அவர்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல்கள் மட்டுமே ஐகோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று 23 நிபந்தனைகளை ஐகோர்ட்டு விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வக்கீல்கள் கருப்பு நிற கோட், கவுன் அணிய தேவையில்லை. அதற்கு பதில் ஆண்கள் வெள்ளை நிறச்சட்டையும், பெண்கள் வெள்ளை நிற சல்வார், சேலை மற்றும் கழுத்தை சுற்றி வெள்ளை நிற பேண்ட் அணிந்தால் போதும் என்று கடந்த மே 14-ந்தேதி நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்திய பார் கவுன்சிலின் இந்த நிர்வாக உத்தரவை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது.

Tags :
|