Advertisement

தலைவலி வருவதற்கான காரணமும் அதன் தீர்வும்..!

By: Monisha Tue, 08 Dec 2020 09:33:31 AM

தலைவலி வருவதற்கான காரணமும் அதன் தீர்வும்..!

தலைவலி, ஒற்றைத்தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களையும் அதற்கான தீர்வையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், டென்ஷன், தலைவலி, ஒற்றைத்தலைவலி ஆகியவை வரும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால், 30 நிமிடங்கள் - 3 மணி நேரத்துக்குள் தலைவலி சரியாகிவிடும்.

பட்டையைப் பொடியாக்கி கொள்ளவும். சிறிது தண்ணீர் கலந்து திக் பேஸ்டாக மாற்றவும். இதை நெற்றியில் தடவலாம். அரை மணி நேரம் கழித்து, இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 2 துளி கிராம்பு எண்ணெய் விட்டு, நன்கு கலக்கவும். இதை நெற்றி, நெற்றி ஓரங்கள் தடவி மசாஜ் செய்யவும். தலைவலி குறையும். கிராம்பு எண்ணெயை முகர்ந்தாலும் தலைவலி குறையும்.

headache,tension,coconut oil,clove,lavender oil ,தலைவலி,டென்ஷன்,தேங்காய் எண்ணெய்,கிராம்பு,லாவண்டர் எண்ணெய்

ஒரு கப் தண்ணீரில் 5-6 துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, இதை ஆறவிடவும். பின்னர் வடிகட்டி இளஞ்சூடாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கத் தலைவலி சரியாகும்.

போதுமான தூக்கம் இல்லையென்றாலும் தலைவலி வரும். எனவே, 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். சீஸ், புளித்த உணவு, பீர், வைன், கிரில்டு அசைவ உணவுகள் ஆகியவற்றில் உள்ள ஹிஸ்டமைன் எனும் கெமிக்கல் தலைவலியை உண்டாக்கும்.

தலைவலி வந்தால் அந்த இடத்தில் 3 துளி லாவண்டர் எண்ணெய்யோ 3 துளி பெப்பர் மின்ட் எண்ணெயோ தெளிப்பது நல்லது. இதனால் டென்ஷன், தலைவலி குறையும்.

4-5 வெற்றிலையை சிறிது நீர் விட்டு அரைக்கவும். அதனுடன் கேம்ஃபர் எசன்ஷியல் எண்ணெய் 2 சொட்டு கலந்து தலையில் பத்து போடவும். அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகும்.

Tags :
|