Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இணையத்தில் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது

இன்று இணையத்தில் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது

By: Nagaraj Mon, 13 July 2020 4:57:39 PM

இன்று இணையத்தில் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது

இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும், பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

cbse,twitter,plus 2 general election by minister ramesh pokri ,
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ, டுவிட்டர், பிளஸ் 2 பொதுத்தேர்வு

இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

cbseresults.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பிளஸ்2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்ட அவர், இதனை சாத்தியமாக்கிய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என்றும், மாணவர்களின் நலன் மற்றும் தரமான கல்வியே எங்களின் முக்கிய நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|