Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்தில் ஹாலோவின் கொண்டாட்டம்... அச்சமூட்டும் வடிவில் தயாரிக்கப்பட்ட உணவுகள்

தாய்லாந்தில் ஹாலோவின் கொண்டாட்டம்... அச்சமூட்டும் வடிவில் தயாரிக்கப்பட்ட உணவுகள்

By: Nagaraj Sat, 28 Oct 2023 1:16:22 PM

தாய்லாந்தில் ஹாலோவின் கொண்டாட்டம்... அச்சமூட்டும் வடிவில் தயாரிக்கப்பட்ட உணவுகள்

தாய்லாந்து: தாய்லாந்து நாட்டு விடுதியில் ஹாலோவீன் கொண்டாட்ட ஏற்பாடு நடந்தது. இதில் அச்சமூட்டும் பல வடிவத்தில் உணவுகள் பரிமாறப்பட்டன.

ஹாலோவீன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தாய்லாந்து நாட்டு உணவு விடுதியில், மூளை கேக்குகள், கண் கருவிழி மில்க் ஷேக் போன்ற அச்சமூட்டும் தோற்றம் கொண்ட உணவுகளை பரிமாறி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

halloween,dead,maids,ghost costume,thailand ,ஹாலோவின், இறந்தவர்கள், பணிப்பெண்கள், பேய் வேடம், தாய்லாந்து

உணவு விடுதியின் வரவேற்பாளர், பணியாளர் அனைவரும் பேய் வேடமிட்டு வாடிக்கையாளர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை வழங்கினர். பேய் வேடமிட்டு பணிப்பெண்கள் வாடிக்கையாளர் முன்பு திடீரென தோன்றி வியப்பளித்தனர்.

சாத்தான் பொம்மைகளும் விடுதியில் சகஜமாக சுற்றித் திரிந்தன. தவளை, நத்தை, பல்லி, பாம்பு, அட்டை பூச்சி வடிவங்களில் இனிப்புகள் பரிமாறப்பட்டன. ஹாலோவீன் தினத்தின் போது மண்ணுலகத்துக்கும், இறந்தவர்களின் ஆன்மா வாழும் உலகத்துக்கும் இடையேயான எல்லை காணாமல் போவதாக நம்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வரும் 31-ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாடப்படுகிறது.

Tags :
|
|