Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்

By: Monisha Tue, 24 Nov 2020 09:44:50 AM

நிவர் புயல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திவரும் இந்த நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

bay of bengal,nivar,storm,report,meteorology ,வங்கக்கடல்,நிவர்,புயல்,அறிக்கை,வானிலைஆய்வு

நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்த அதி தீவிர நிவர் புயலானது மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|