Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய குழு இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை

மத்திய குழு இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை

By: Monisha Thu, 09 July 2020 09:50:36 AM

மத்திய குழு இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்துக்கு சென்றுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது.

மத்திய குழு 3-வது முறையாக நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவில் மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்த்தி அகுஜா தலைமையில் சுபோத் யாதவா மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு இடம் பெற்று உள்ளனர். 2 மருத்துவ நிபுணர்களும் உள்ளனர். அதன்படி பெங்களூருவில் இருந்து மத்திய குழு தலைவரான மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா வந்தார். அவருடன் மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா வந்தார். இவர்கள் சென்னை வந்த உடன், ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

அதேபோல் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அரசு இணை செயலாளர்கள் ராஜேந்திர ரத்னு, சுஹாஸ் தந்துரு ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். இந்த குழுவினருடன் மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

central committee,health minister,coronavirus,prevention ,மத்திய குழு,சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வைரஸ்,தடுப்பு நடவடிக்கை

3 நாள் பயணமாக வந்துள்ள இந்த குழு இன்று காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கின்றனர். பின்னர் சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்கின்றனர். அதன் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.

அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பகல் 2.30 மணிக்கு சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் பரிசோதனை மையங்களை பார்வையிடுகின்றனர். மாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை கிண்டி கிங் நிலையத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிடுகின்றனர். மாலை 4.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிறப்பு மையத்தை ஆய்வு செய்கின்றனர். பின்னர் புளியந்தோப்பு பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து எழும்பூர் மருத்துவ அலுவலகத்தில் மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை செய்கின்றனர்.

Tags :