Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மைதா மற்றும் ரவை, முழு கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதிப்பு

மைதா மற்றும் ரவை, முழு கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதிப்பு

By: vaithegi Sun, 28 Aug 2022 3:09:28 PM

மைதா மற்றும் ரவை, முழு கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதிப்பு

இந்தியா: இந்தியாவில் வட மாநிலங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் கோதுமை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் ரவை, மைதா போன்ற பொருட்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை மக்கள் அதிகம் உண்கின்றனர். அன்றாட சமையலில் இந்த 3 பொருட்களும் முக்கிய பங்கு வகித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக தீவிரமாக நடந்த ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 70 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.எனவே அதனால் உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவியது. எனவே இதன் காரணமாக கோதுமையின் விலை வரலாறு காணாத மிக அதிக அளவுக்கு உயர்ந்தது.

இதை அடுத்து தற்போது கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா மற்றும் ரவை, முழு கோதுமை மாவு பொன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

central government,maida,semolina,wheat flour ,மத்திய அரசு,மைதா ,ரவை, கோதுமை மாவு

மேலும் உயர்ந்து வரும் கோதுமையின் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நாட்டில் 2021 – 2022 ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை மாவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய இந்த அறிவிப்பால் கோதுமை பயிர் உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோதுமை தேக்கம் அடைந்து விடுமோ என அச்சமும் எழுந்துள்ளது. மறுபுறம் இந்தியாவில் கோதுமையின் விலை இயல்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|