Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை என மத்திய அரசு அறிவிப்பு

நாளை முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை என மத்திய அரசு அறிவிப்பு

By: vaithegi Thu, 30 June 2022 7:31:25 PM

நாளை முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை என மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. சுற்றுசூழல் மட்டுமல்லாமல் குறிப்பாக நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரிய அளவில் ஆபத்து பெருகிக்கொண்டே இருக்கிறது.

இதை தொடர்ந்து இந்தியாவில் சில மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இருந்தாலும் கூட மக்களுடைய பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கூட ஓரளவுக்கு பாதிப்பை குறைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை ஆகியவற்றுக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

plastics,central govt ,பிளாஸ்டிக், மத்திய அரசு

மேலும், இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை சட்டத்திற்குப் புறம்பாக உபயோகித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது..

பிளாஸ்டிக் குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, பிளாஸ்டிக் குச்சிகளுடன் கூடிய பலூன்கள், பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மோகோல், பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் கத்தி, பிளாஸ்டிக் ஸ்பூன், ஃபோர்க், உறிஞ்சுக் குழல், ட்ரே, மற்றும் ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்கள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :