Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவிப்பு

விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவிப்பு

By: vaithegi Wed, 21 Dec 2022 6:27:00 PM

விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவிப்பு

இந்தியா: சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி கொண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி சுகாதாரத்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

central govt,airport , மத்திய அரசு,விமான நிலையம்

அதாவது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிவார்கள் என்பதால் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று முதல் இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அத்துடன் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :