Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளிப்பு

தமிழகத்தில் புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளிப்பு

By: vaithegi Thu, 27 Apr 2023 10:34:30 AM

தமிழகத்தில் புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளிப்பு

இந்தியா: நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து அதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. எனவே இதற்காக 1570 கோடி ரூபாய் ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் தமிழகத்திற்கு புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்கவும் ஒப்புதல் வழங்ப்பட்டுள்ளது திருப்பூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட 11 இடங்களில் இந்த புதிய நர்ஸிங் கல்லூரிகள் துவங்கப்படவுள்ளது.

central govt nursing colleges , மத்திய அரசு,நர்சிங் கல்லூரிகள்

இதையடுத்து அனைத்து நர்சிங் கல்லூரிகளும் அந்தந்த பகுதி மருத்துவ கல்லூரிகளுக்கு அருகே கட்டமைக்கப்பட்டவுள்ளது.

எனவே இதன் கட்டுமான பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :