Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல் உள்ளிட்ட 14 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை அதிரடியாக உயர்த்தியது…… மத்திய அரசு

நெல் உள்ளிட்ட 14 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை அதிரடியாக உயர்த்தியது…… மத்திய அரசு

By: vaithegi Thu, 09 June 2022 07:53:27 AM

நெல் உள்ளிட்ட 14 வகையான பயிர்களின்  கொள்முதல் விலையை அதிரடியாக உயர்த்தியது…… மத்திய அரசு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலையை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480, சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385, நெல் குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

algae lentils,sesame,sunflower seeds,union minister anurag thakur ,பாசி பருப்பு,  எள், சூரியகாந்தி விதை ,மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

நெல் உள்ளிட்ட 14 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், 2022-23 பயிர் ஆண்டுக்கான பொது ரக நெல் ரகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.2,060 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். நெல் முக்கிய காரிஃப் பயிர், இதன் விதைப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்பது குறிப்படத்தக்கது.

Tags :
|