Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை

வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை

By: vaithegi Mon, 27 Feb 2023 09:44:50 AM

வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லைஎன்று மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவிப்பு ... மத்திய வா்த்தக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

central government,onion,export , மத்திய அரசு ,வெங்காயம்,ஏற்றுமதி

இதனை அடுத்து கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 16.3 சதவீதம் அதிகரிப்பாகும். இதில் டிசம்பா் மாதத்தில் மட்டும் வெங்காய ஏற்றுமதி மதிப்பு முந்தைய மாதத்தைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் அதே நேரத்தில் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|